"ஈரோட்டில் ராணுவத்தை களமிறக்க வேண்டும்" -அமமுக திடீர் கோரிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க, ராணுவத்தை களமிறக்கி, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுகவைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பிரச்சாரம் செய்வார் என்று கூறினார்.
இந்தத் தேர்தலில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளதாக கூறிய அவர், அவற்றைத் தடுக்க ராணுவத்தை கொண்டு வந்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Next Story