குழந்தை பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்.. கேக்கை வெட்டிய போது அதிர்ச்சி... வாட்ஸ் ஆப்பில் பிரபல பேக்கரி மீது புகார்

x
  • கோபிசெட்டிப்பாளையத்தில் குழந்தையின் பிறந்தநாளுக்காக வாங்கிச் சென்ற கேக், கெட்டுப்போனதாக புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கோபிச்செட்டிபாளையம் அருகே அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்.
  • இவர் தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, கோபி அண்ணா பாலம் அருகேயுள்ள பிரபல பேக்கரியில் 750 ரூபாய் மதிப்புள்ள கேக் ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார்.
  • இதையடுத்து, கேக்கை வெட்டி பாதி சாப்பிட்ட நிலையில் அது கெட்டுபோனது எனத் தெரிய வந்துள்ளது.
  • கெட்டுப்போன கேக்கை புகைப்படம் எடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகாரளித்துள்ளார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் கேட்ட போது அவர் வாங்கிச் சென்ற கேக் கெட்டுப் போனது எனவும், கேக் வாங்கிய ரசீது பெற்ற பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்