ஈரோடு இடைத்தேர்தல்..வாபஸ் பெறாத ஓபிஎஸ் தரப்பு - ரிஜெக்ட் ஆன மனுக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
தேர்தலில் இருந்து விலகுவதாக ஓ.பி.எஸ் தரப்பினர் அறிவித்த போதிலும், அவரது வேட்பாளர் செந்தில் முருகன், தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில், நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, அவரது இரண்டு மனுக்களுமே தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் இரண்டு மனுக்களிலும் போதிய அளவுக்கு முன்மொழிபவர்கள் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story