'பழனிசாமி' என சொல்ல வந்த ஓபிஎஸ்.. அடுத்த நொடியே எழுந்த பெரும் கூச்சல் - அப்படியே வார்த்தையை முழுங்கிய ஓபிஎஸ்
- "சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும்"
- சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என தீர்மானம் நிறைவேற்றம்
- மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம்
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த தீர்மானம்
- ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
- அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை, அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார் - ஈபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் ஓபிஎஸ் ஆவேசம்.
- 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது - ஓபிஎஸ்.
- ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு தொண்டர்கள் வழங்கிய மரியாதை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது - ஓபிஎஸ்
- ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஈபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் பேசி வரும் ஓபிஎஸ்
- எம்ஜிஆர் பாணியில் நீதிக்கு தலைவணங்கி உள்ளோம் - ஓபிஎஸ்
Next Story