ஈரோடு இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை | #ErodeByElection | #Electioncommission
ஈரோடு இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் விநியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்ட மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், இடைத்தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது, எந்த ஒரு சமயம், மொழி அல்லது சாதியினரிடையே வேறுபாடுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்றும், வழிபாட்டு தலங்களில் பிரசாரம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில், தனிநபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புடைய மது பானங்கள், பரிசு பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.