தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் ஈரோடு கிழக்கு - தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 6 பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட25 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
அங்கு தினமும் வாகன சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
Next Story