'பிரசாரத்தின்போது எதிர்பாராமல் சந்தித்த திமுக அமைச்சர் - அதிமுக முன்னாள் அமைச்சர் .. அதற்கு பின் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

x
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குசேகரிப்பின்போது, தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதியும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கை கொடுத்து பரஸ்பரமாக பேசிக் கொண்டது, வரவேற்பை பெற்றது.
  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அந்த தொகுதிக்கு உள்பட்ட புதுமை காலனியில் உள்ள பள்ளிவாசல் அருகே தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தொழுகை முடிந்து வந்தவர்களிடம் வாக்குசேகரித்தார்.
  • அதே பகுதியில், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் நிர்வாகிகளும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குசேகரித்தனர்.
  • அப்போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் கை கொடுத்து பரஸ்பரமாக பேசிக் கொண்டது அங்கிருந்தவர்களிடம் வரவேற்பு பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்