'இரட்டை இலை' கோலத்தால் பிரச்சினை.. திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் - களமிறங்கிய துணை ராணுவம்

x
  • ஈரோட்டில் திமுக தேர்தல் பணிமனைக்கு முன்பாக இரட்டை இலை சின்னம் கோலம் போடப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டம் சூழ்ந்த நிலையில் பாதுகாப்பிற்கு துணை ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ராமமூர்த்தி நகர் பகுதியில் திமுக பணிமனைக்கு முன்பாக அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தை சாலையில் கோலமிட்டுள்ளனர்.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் அக்கோலத்தை தண்ணீர் ஊற்றி அழித்துள்ளனர்...
  • இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்படவே காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்