வந்தே பாரத்தில் ஜம்முன்னு நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டே சென்னை வந்த ஈபிஎஸ்

x

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயில் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24ம் தேதி முதல் சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனையடுத்து இன்றைய தினம் காலை சேலத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை புறப்பட்டார். முன்னதாக சேலம் ரயில் நிலையத்திற்கு வந்த ஈபிஎஸ்-ற்கு தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் வந்தே பாரத்தில் ஏறி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்