அமைச்சரின் குற்றச்சாட்டு..ஈபிஎஸ், சபாநாயகர் இடையே காரசார விவாதம் - பேரவையில் பரபரப்பு

x

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதிலளிக்கும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக சார்பில் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பதைக் கேட்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பதில்லை என்று கூறினார். அப்போது எழுந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி குறித்து வேண்டுமென்றே அமைச்சர் அவதூறாக பேசுவதாகவும், அமைச்சர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதைப்போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலையில் வழங்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், அதிமுக ஆட்சியிலும் எதிர்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை கொடுத்ததில்லை என்றும், தற்போது கேள்வி நேரம் மட்டுமே நேரலை செய்யப்படுகிறது என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக, அப்பாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்ததால், பிரச்னைக்கு பேசித் தீர்வு காணலாம் என்று கூறி அப்பாவு விவாதத்தை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்