ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு... அமைச்சர் மா.சு. பதிலடி...
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் தவறான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு அமைச்சர் மா.சு. பதிலடி கொடுத்துள்ளார்.
ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு... அமைச்சர் மா.சு. பதிலடி...
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடி பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் கொடுத்ததாக எந்தவித புள்ளி விவரக் குறிப்பும் இல்லை எனவும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை என்ற திட்டத்தில் கூடுதலாக ஒரு வாகனத்தை இயக்கி மக்களை தேடி மருத்துவம் என்று ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லி திமுக அரசு விளம்பரம் தேடுவதாகவும், மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பில் செலவிடப்பட்டுள்ளது என்றும் ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், எடப்பாடி எப்போது தூக்கத்தில் இருந்து விழித்தார் என்பது தெரியவில்லை என்றும் அறிக்கைகள் மூலம் மக்களை குழப்பலாம் என்று நினைத்தால் அது நடைபெறாது என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.