"அய்யய்யோ குடல்லாம் வெளிய வந்துருச்சே".. சென்னையில் பயங்கரம்.. வீடு புகுந்து மனைவி கண் முன்னே கணவனுக்கு கத்திக்குத்து
சென்னை, திருவான்மியூரில் வீடு புகுந்து மனைவி கண் முன்னே கணவனை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெரியார் நகர் பகுதியில் ஹரி விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சரண் ராஜ் என்பவருக்கு முன் விரோதம் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சரண் ராஜ் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரி விக்னேஷும், அவரது மனைவி பாக்கிய லட்சுமியும் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனிடையே, சரண் ராஜ் தனது கூட்டாளிகளுடன், ஹரி விக்னேஷின் வீடு புகுந்து அவரது தாயாரை கத்தியால் வெட்டி விட்டு, பின்னர் அவரையும் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஹரி விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.