இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமர்;பகவத் கீதை மீது சத்திய பிரமாணம்-வைரலாகும் ரிஷி சுனக் குறித்த தகவல்

x

ரிஷி சுனக், கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானபோது பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்ற செய்தி தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்க இருக்கிறார். 45 நாட்கள் பிரதமராக இருந்த நிலையில் லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்வதாக தெரிவித்தார். தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இங்கிலாந்து பிரதமர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த முதல் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2015ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட போது, அவர் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்ற செய்தி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்