இன்று வெளியாகிறது பொறியியல் தரவரிசை பட்டியல்

x

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை வெளியாகிறது. பி.இ., பி-டெக் படிப்பில் சேர்வதற்கான கலந்தாவுக்கு, ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 301 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 5ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட நிலையில், தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி பட்டியலை வெளியிட உள்ளார். அவற்றில் திருத்தம் இருந்தால், 30 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை சேவை மையங்களில் சென்று சரி செய்துக் கொள்ளலாம். ஆன்-லைன் மூலம் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து, பொதுக் கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ஆன்-லைன் மூலம் 4 சுற்றுகளாக நடைபெறுகிறது. ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை துணைக் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது. காலியாக உள்ள ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு செப்டம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 3ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்