அன்னையர் தினத்தில் தாயை பார்க்க சென்ற சென்னை இன்ஜினியர் விபத்தில் ஸ்பாட்டிலே பலி

x

ஆவடி அருகே சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி, கார் கவிழ்ந்த விபத்தில், இளைஞர் உயிரிழந்தார். நரேந்திரன் என்ற அந்த இளைஞர், அன்னையர் தினத்தையொட்டி சொந்த ஊரான அரக்கோணத்திற்கு சென்று தனது தாயை பார்த்து விட்டு திரும்பிய போது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நரேந்திரன், சென்னை கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். திருமணமாகி ஜனனி என்ற மனைவியும், 9 மாத கைக்குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்