ஒரு வழி பாதையில் தவறாக நுழைந்த பேருந்து மோதி மென்பொறியாளர் பலி
சிதம்பரத்தில் ஒரு வழி பாதை என போக்குவரத்து காவல்துறை தடுப்பு பேரிக்காடை மீறி சென்ற ஆம்னி பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் மென்பொறியாளர் உயிரிழந்துள்ளார்.
கஞ்சி தொட்டி பேருந்து நிலையம் அருகில் ஒரு வழி பாதை என போக்குவரத்து காவல்துறையினர் பேரிகார்ட் வைத்திருந்தனர். இதை பொறுப்பெடுத்தாமல், ஒரு வழி பாதையில் தனியார் ஆம்னி பேருந்து தவறாக நுழைந்துள்ளது. அப்போது எதிரே வந்த மென் பொறியாளர் ராகுல்குமாரின் இருச்சக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் தடுப்பு கட்டைகளை மீறி ஒரு வழி பாதையில் நுழைந்த தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story