காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, மாநிலம் முழுவதும் 15 மாதங்களில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள்,

மலைப் பிரதேசங்களில், டாஸ்மாக் மதுபான கடைகளில், மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்றுக்கொண்டு,

காலி பாட்டில்களை திருப்பிச் செலுத்தும் போது அந்த தொகையை திருப்பி கொடுக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவை மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில் காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்திய பின்,

கடந்த மாதம் வரை 95 சதவீத காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டதாக டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை படிப்படியாக 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, 15 மாதங்களில்,

அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் - உத்தரவு

பெரம்பலுார் மாவட்டங்களில் காலி மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் அமல்

கடந்த மாதம் வரை 95% காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டதாக டாஸ்மாக் நிறுவனம் தகவல்

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை படிப்படியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்த திட்டம்

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்

15 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த நீதிபதிகள் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்