"வங்கியை பூட்டாமல் சென்ற ஊழியர்".. அதிரடி ஆய்வு நடத்திய அதிகாரிகள்.. - அம்பலமான கையாடல்... கெடு விதித்த அதிகாரி -ஊழியர் எடுத்த விபரீத முடிவு

x

ராமநாதாபுரம் மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நாகராஜ் செயலளாராக பணியாற்றி வந்தார். பொட்டகவயல் கிராமத்தை சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நகைகளை வைத்து அடமானம் கடன் பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் இரவு வங்கியை மூடாமல் சென்ற விவகாரத்தில் நாகராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அச்சமடைந்த வாடிக்கையாளர்கள் கடனை அடைத்து நகைகளை மீட்டு உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் வங்கியில் ஆய்வு செய்த போது, 40 லட்சம் ரூபாயை நாகராஜ் கையாடல் செய்தது தெரியவந்தது. இதில் 10 லட்ச ரூபாயை நாகராஜ் திருப்பி செலுத்தி இருக்கிறார். மீதமுள்ள பணத்தை ஓரு வாரத்தில் திருப்பியளிக்குமாறு வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த நாகராஜ் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வங்கி பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேறு யாருக்கும்

தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்