கொளுத்தி போட்ட எலான் மஸ்க் - வெள்ளை மாளிகைக்குள் வெடிக்கும் வெடி

x
  • ட்விட்டரில் ப்ளூ டிக்-கிற்கான கட்டணத்தை செலுத்த முடியாது என ஊழியர்களுக்கு வெள்ளை மாளிகை உத்தரவு பறந்துள்ளது.
  • ட்விட்டரில் சுயவிபரம் பரிசோதிக்கப்பட்ட பிரபலங்கள் கணக்கிற்கு ப்ளு டிக் வழங்கப்படுகிறது.
  • இந்த சேவைக்கு மாதம் 8 டாலர் சந்தா கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
  • இந்த சந்தா கட்டண நடைமுறை ட்விட்டரில் இன்னும் முழுவதும் அமலுக்கு வந்ததாக தெரியாத நிலையில், பலர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த சூழலில் ஊழியர்களின் ட்விட்டர் கணக்கிற்கு வழங்கப்படும் ப்ளூ டிக் கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என ஊழியர்களுக்கு வெள்ளை மாளிகை இ-மெயில் அனுப்பியுள்ளது.
  • ஊழியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலுத்தி ப்ளு டிக் வாங்கிக்கொள்ளலாம் எனவும் வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது.
  • இதுபோலவே, நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மேலும் , பிசினஸ் கணக்குகளுக்கு கோல்டு டிக் பெற ஆயிரம் டாலர் செலுத்த வேண்டும் என்பதால், நியூயார்க் டைம்ஸ் கணக்கிலிருந்து கோல்டு டிக் நீக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்