யாரையும் Distrub பண்ணாம சாலையை கடந்த யானை கூட்டம்... Wait பண்ணி சென்ற வாகனங்கள்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் அருகே, தேசிய நெடுஞ்சாலையை காட்டு யானைக்கூட்டம் கடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள், வறட்சி காரணமாக, குடிநீர் மற்றும் உணவு தேடி கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், பகல் நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பண்ணாரி அம்மன் கோயில் அருகே, 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றன. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர்.
Next Story