நேற்று நிம்மதி பெருமூச்சு... விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி - பீதியில் உறைந்த மக்கள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ள ஜெர்த்தாலாவ் பெரிய ஏரி பகுதியில் 5 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன... 2 குட்டிகளுடன் வந்த 3 பெரிய யானைகள் ஏரி நீரில் ஆனந்தக் குளியல் போட்டன. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். நேற்று வனத்துறையினர் ஈச்சம்பள்ளம் அருகே சுற்றி திரிந்த 20 வயது மக்னா யானையை பிடித்து ஆனை மலை காட்டிற்க்கு அனுப்பி வைத்த நிலையில், இன்று அதிகாலை பெரிய ஏரியில் யானைகள் முகாமிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
Next Story