அரசு பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு...பதைபதைக்க வைக்கும் விபத்தின் காட்சி

x

மேட்டூர் பேருந்து நிலையத்தில் மூதாட்டி மீது அரசு பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மேட்டூர் அடுத்த சின்ன மேட்டூர் பகுதியில் வசித்து வந்தவர் குஞ்சம்மாள். சம்பவத்தன்று, மேட்டூர் பேருந்து நிலையத்தில் மூதாட்டி நின்று கொண்டிருந்த போது, அரசு பேருந்து ஒன்று மூதாட்டியின் மீது மோதியது. இதில் கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்