மெடிக்கல் வாயிலிலேயே மயங்கி உயிரிழந்த முதியவர் - கும்பக்கோணத்தில் அதிர்ச்சி
கும்பகோணத்தில் மருந்து வாங்க மெடிக்கலில் நின்றவர் திடீரென மர்மமான முறையில் இறந்ததால் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள பிரபல மெடிக்கலில் மருந்து மாத்திரை வாங்க வந்த நபர் சிறிது நேரம் நின்று கொண்டிருக்க
திடீரென மயங்கி மர்மமான முறையில், வாயில் நுரை தள்ளி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செருக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் இறந்ததை அறிந்து வந்த உறவினர்கள் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்காதது ஏன் என கேள்வி எழுப்பி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்து உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
Next Story