இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து ராணுவம் அணிவகுப்பு

x

நாட்டின் 74 - வது குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி டெல்லி வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிபர் அல் சிசிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.


4 நாள் பயணம் மேற்கொள்ளும் அவர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார்.

குடியரசு தினநாளில் டெல்லி கடமை பாதையில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் எகிப்து ராணுவம் பங்கேற்கிறது.


Next Story

மேலும் செய்திகள்