பள்ளிக்கு வராத மாணவர்களை தேடி பிடித்து 10ம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுத வைக்க கல்வித்துறை அறிவுறுத்தல்
மாநில பாடத்திட்டதிலும் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிக்கு முறையாக வராத, இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை சேகரித்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், அதனை கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளனர். இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது. அவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்து பொதுத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டம் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Next Story