இசிஆர் சாலையில் குவிந்த கார்கள்... இளைஞர்கள் சாகசம் செய்ய திட்டம் - தட்டிக்கேட்ட போலீசாருடன் தகராறு

x

புத்தாண்டின் போது, சென்னையில் போலீஸ் கெடுபிடி அதிகம் இருக்கும் என்பதால், கிழக்கு கடற்கரை சாலையில் கார் சாகத்தில் ஈடுபட ஏராளமான இளைஞர்கள் விலை உயர்ந்த கார்களுடன் குவிந்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, பைக், கார் சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்க, சென்னை போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் சென்னையில் உள்ள வசதி படைத்த இளைஞர்கள், தங்கள் சொகுசு கார்களுடன் முன்கூட்டியே திருப்போரூர் பகுதியில் குவிந்தனர். மேலும், சென்னையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக அதிவேகத்தில், பயணித்த‌தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திருப்போரூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலையில், கார் சாசகத்தில் ஈடுபட்டு, அதை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடவும் திட்டமிட்டு இருந்த‌தாக தெரிகிறது. கார் சாகசத்திற்கான முன்பதிவு, இணையதளத்தில் நடைபெற்ற நிலையில், சுமார் 50 இளைஞர்கள் சொகுசு கார்களுடன் திருப்போரூரில் குவிந்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் ஒரு சில இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்