அமெரிக்க அதிபர் உக்ரைன் சென்றதன் எதிரொலி - ரஷ்ய அதிபர் புதின் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா
- அமெரிக்கா ரஷ்யா இடையே செய்யப்பட்டிருந்த ஸ்டார்ட் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக, புடின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
- உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அதிகரித்தது.
- ஞாயிறு அன்று திடீரென்றுஅமெரிக்க அதிபர் பிடன் சென்றதால் கோபமடைந்த ரஷ்யா, ஸ்டார்ட் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது.
- 2010இல் அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அன்றைய ரஷ்ய அதிபர் மெட்வெடெவ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடைமுறைபடுத்தினர்.
- இதன்படி, இரு நாடுகளாம் தலா ஆயிரத்து 550 அணு குண்டுகள் வரை வைத்திருக்க உச்சவரம்பு விதிக்கப்பட்டது.
- இவற்றை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்களில் பொருத்த அனுமதிக்கப்பட்டது.
- 2021இல் ஜோ பைடன் பதவியேற்ற பின், இந்த ஒப்பந்தம், மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
Next Story