துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் - "உங்களுக்காக இந்தியா துணை நிற்கும்" - பிரதமர் மோடி இரங்கல்
துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபரின் ட்வீட் ஒன்றிற்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் குறிப்பிட்டார். துருக்கி மக்களுக்கு இந்தியா இந்த நேரத்தில் திடமாக துணை நின்று, இந்த சம்பவத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
Next Story