அன்றே கணித்தார் விஞ்ஞானி...! 3 -ம் தேதி ட்விட்டரில் பதிவு 6 -ம் தேதி நிலநடுக்கம்
பூமிக்கு அடியில் உள்ள கண்டத்தட்டுகளில் நடக்கும் மாற்றங்களால், பூமி சுழற்சியின்போது அவை உராயும் போது நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.
கண்டத்தட்டுகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவது, அதாவது நிலநடுக்கங்களை முன்கூட்டியே கண்டுபிடிப்பது கடினமானது சாத்தியமானது இல்லை என்றே சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் துருக்கி, சிரியாவில் துருக்கி, சிரியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரை பலிவாங்கியிருக்கும் நிலநடுக்கம் குறித்து டச்சு விஞ்ஞானி 3 நாட்களுக்கு முன்பாவே கணித்து ட்விட்டரில் தகவல் பதிவிட்டுள்ளார்.
தெற்கு, மத்திய துருக்கி, சிரியா, ஜோர்டான் பகுதியில் விரைவில் 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்படலாம் என பிராங் ஹூகெர்பீட்ஸ் கூறியுள்ளார்.
கணிப்பின்படி இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கும் அவர், கிரகங்கள் இருப்பிட கணிப்பின்படி நிலநடுக்கத்தை கணிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அவரது இந்த ஆய்வை சிலர் பிரமிப்பாக பார்க்கும் நிலையில், சிலர் முந்தைய காலங்களில் அவரது கணிப்பு தவறாகவும் இருந்துள்ளது என்ற கருத்துக்களையும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.