மீனவ கிராமத்துக்கு சென்ற துர்கா ஸ்டாலின்...பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வானகிரி மீனவ கிராமத்துக்கு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு கிராம மக்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கோயிலுக்கு சென்று வழிபட்ட துர்கா ஸ்டாலின், பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டார். அப்போது, இந்திய கடற்படை தாக்குதலில் படுகாயம் அடைந்த வீரவேல் குடும்பத்தினரும், படகு விபத்தால் பாதிக்கப்பட்ட பாஸ்கர் என்ற மீனவரும் துர்கா ஸ்டாலினை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுக்களை முதல்வரிடம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Next Story