மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதி..! Dayanidhi Azhagiri

x

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

மு.க. அழகிரியின் மகனும், பிரபல சினிமா படத்தயாரிப்பாளருமான துரை தயாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார். சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த முதல்வர், துரை தயாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்