துல்கர் சல்மான் வீட்டில் உயிரிழந்த ஓட்டுநர்

x

பிரபல நடிகர் துல்கர் சல்மானின் சென்னை வீட்டில் ஓட்டுநராக பணிபுரிந்த முதியவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் துல்கர் சல்மான் வீட்டில் பாஸ்கர் என்பவர் கடந்த ஒரு மாதமாக ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் துல்கர் சல்மான் வீட்டில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் பீட்சா மற்றும் கொக்க கோலா சாப்பிட்டு கொண்டிருந்த பாஸ்கர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்த ஓட்டுநரின் உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்