சோமாலியாவை வாட்டும் வறட்சி...பறிபோகும் குழந்தைகளின் உயிர்

x

சோமாலியாவை வாட்டும் வறட்சி...பறிபோகும் குழந்தைகளின் உயிர்

6 முதல் 59 மாதங்களுக்கு இடைப்பட்ட 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளில், 59 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24 சதவீதம் பேர் மிக மோசமான நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சோமாலியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர். கடந்த 4 மழைக்காலங்களிலும் மழை பொய்த்துப் போன நிலையில், 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை சோமாலியா எதிர்கொண்டுள்ளது.

அல் ஷபாப் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களாலும், சர்வதேச விலை வாசி உயர்வாலும் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது தொடர்புடைய நோய்களால் ஒவ்வொரு 10 ஆயிரம் பேரில் குறைந்தது 2 பேராவது ஒவ்வொரு நாளும் இறக்கும் அளவுக்கு சோமாலியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்