மதுபோதையில் காரை இயக்கி இருசக்கர வாகனம் மீது மோதல்.. பிரீத் அனலைசர் கருவியில் ஊதாமல் அடம்பிடித்த போதை ஆசாமி
மதுரையில் பிரித்விராஜ் என்பவர் மதுபோதையில் காரை இயக்கிய நிலையில், பைபாஸ் சாலை அருகே இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இதனால் அதில் பயணித்த 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பிரித்விராஜை மடக்கிப்பிடித்த போலீசார், பிரீத் அனலைசர் கருவி கொண்டு சோதனை செய்ய முயன்றனர். ஆனால் சுமார் 2 மணி நேரம் சாலையில் படுத்தும், காரினுள் படுத்தவாறும் கருவியில் ஊதாமல் பிரித்விராஜ் போலீசாரிடம் போக்குக்காட்டினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story