லாரியின் பின்பக்க தொட்டியை தூக்கிய போது பாய்ந்த மின்சாரம் - ஓட்டுநர் உயிரிழப்பு

x
  • ராணிப்பேட்டை மாவட்டம், முசிறி அருகே லாரி மீது உயர் மின்னழுத்த கம்பி உரசியதில், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • புளித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம்.
  • லாரி ஓட்டுநரான இவர், முசிறி அருகே கல் குவாரி ஒன்றில் ஜல்லிக் கற்களை ஏற்றச் சென்றுள்ளார்.
  • அப்போது, லாரியின் பின்புற தொட்டியை தூக்கிய போது, எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது.
  • இதில் மின்சாரம் தாக்கி, பாலசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்