"குடிநீராகும் கடல்நீர்.. சென்னையில் 24 மணி நேரமும் |குடிநீர்"அமைச்சர் நேரு அறிவிப்பு |Chennai |water
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜோதி அம்மாள் நகரில், பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.இதில், கழிவுநீர் உந்துநிலையம், குடிநீர் குழாய் பதிக்கும் பணி, நூலகம் அமைக்கும் பணிகள் அடங்கும். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் 24 மணிநேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவது தான் அரசின் குறிக்கோள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே, தென்சென்னை வேட்பாளர் குறித்தும், மேடையில் அமைச்சர் பிரச்சாரம் செய்தார்.
Next Story