மிரட்டும் கொழுப்பு கல்லீரல் நோய்..தவிர்க்க வேண்டிய உணவுகள்...குண்டாக இருப்பவர்களுக்கு அடுத்த ஷாக்
வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உலகெங்கும் பலகோடி பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் கொழுப்பு கல்லீரல் நோயினாலும் பல கோடி பேர் பதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் நோய் தாக்கம் அதிகமாக இருக்கும்...ஆனால் சமீப காலமாக மது அருந்தாதவர்களுக்கும், வாழ்வியல் முரைகளால் கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது . அந்த வகையில், மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயினால் உலக மக்கள் தொகையில் சுமார் 25 முதல் 30 சதவீதத்தினர் பாதிக்கப் பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் இந்நோயினால் மூன்றில் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் மட்டும் சுமார் 47 கோடி பேர் கொழுப்பு கல்லீரல் நோயினால் பாதிக்கப்படுள்ளனர். கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதை குறிக்கிறது. இது கல்லீரலை பாதித்து, கல்லீரல் சிரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.
மஞ்சள் காமாலை ஏற்படுதல், தோலில் அரிப்பு, வயிறு வீக்கம், கால்கள் வீக்கம், பசியின்மை ஆகியவை இந்த நோயில் அறிகுறிகள் ஆகும். இது அனைத்து வயதினரையும் பாதித்தாலும், அதிக எடை கொண்டவர்கள் எளிதில் இலக்காகிறார்கள். கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினால், இதய நோய்கள், நீரழிவு நோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக சிகாகோவில் நடந்த மருத்துவ மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு, அளவுக்கு அதிமாக உண்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதீத உணவினால் சேரும் கொழுப்பு சத்தை கல்லீரலால் கரைக்க முடியாத போது, அங்கு அவை படிகின்றன. இதை தவிர்க்க, மாவு சத்து அதிகம் கொண்ட உணவு வகைகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டுமஎன்கின்றனர் மருத்துவர்கள். நார் சத்து அதிகம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்கின்றனர்.