பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலைகொலையிலிருந்து தப்பிக்க நரபலி நாடகம்…
தர்மபுரி , காட்டம்பட்டி
காட்டம்பட்டி , நந்தகுமார்
சுதா - சிறுவனின் தாய்
மூக்கப்பன் - சிறுவனின் தாத்தா
காணாமல் போன சிறுவன் அடித்துக் கொலை…
தண்ணீர் டேங்கிலிருந்து சடலமாக மீட்பு…
பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலை…
கொலையிலிருந்து தப்பிக்க நரபலி நாடகம்…
வீட்டு வெளியில விளையாடிட்டு இருந்த சிறுவன் தண்ணீர் டேங்க்ல இருந்து சடலமா மீட்கப்பட்ருக்காரு… நரபலி கொடுக்கப்பட்டதா ஊர் முழுக்க பரவிய வதந்தி…
இப்போ, கொலையா மாறுனது எப்படி?
பிரீத் (தண்ணீர் டேங்கிலிருந்து மீட்கப்படும் காட்சி)
ஊரே ஒன்று திரண்டு கூடிநிற்க… தண்ணீர் டேங்க் மேல் ஏறிய தீயணைப்பு துறையினர் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட ஏதோ ஒன்றை கயிறுகட்டி கீழே இறக்கினார்கள்.
அதைப்பார்த்து கொண்டிருந்த ஒரு கூட்டம் கண்ணீருடன் கதறி அழத்தொடங்கியதும் அந்த இடமே பதற்றத்தில் பரிதவித்து தொடங்கியது.
காரணம், அந்த,
பையிலிருந்தது
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஒரு சிறுவன்.
என்ன நடந்ததென்கிற முழு பின்னணியை தெரிந்துகொள்ள விசாரணை களத்தில் இறங்கினோம்…
சம்பவம் நடந்த ஊர் தர்மபுரி மாவட்டம் , காட்டம்பட்டி கிராமம்.
இதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிமூலம் , சுதா தம்பதி.
இவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள். அதில் மூத்தமகன் மதியரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார் .
ஆதிமூலம் வெளியூரில் சொந்தமாக ஜேசிபி வைத்து தொழில் செய்து வந்த நிலையில் அவ்வப்போது மனைவி பிள்ளைகளை பார்ப்பதற்கு சொந்த ஊருக்கும் வந்து செல்வதுண்டு.
ஆறு வயதான மதியரசு தினமும் மாலை விளையாடுவதற்காக அருகிலுள்ள சக நண்பர்களின் வீடுகளுக்கு செல்வது வழக்கம்.
அப்படி, சம்பவத்தன்று விளையாட சென்ற சிறுவன் பொழுது சாய்ந்தும் வீடு திரும்பவில்லை…
இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் ஊர் முழுவதும் தேடி பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், மதியரசு பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை…
இதனால் பதறிப்போனவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல்கொடுத்துவிட்டு சிறுவனை கண்டுபிடிப்பதற்காக சுற்றுவட்டாரங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.
ஊர்காரர்கள் ஒருபுறம் உறவினர்கள் மற்றொரு புறமென ஒட்டுமொத்த கூட்டமும் மாயமான மதியரசனை தேடும் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
அப்போதுதான், அதே கிராமத்தைச் சேர்ந்த தூரத்து உறவினரான பிரகாஷ் என்ற இளைஞர், மதியரசனை யாரோ அம்மாவாசைக்கு நரபலி கொடுத்துவிட்டதாக கூறி ஊருக்குள் ஒரு வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்.
பிரகாஷின் பேச்சை நம்பிய உறவினர்கள் நரபலி கொடுப்பதற்காக மதியரசன் கடத்தப்பட்டாரா ?
அல்லது, வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா ? என துப்பு துலக்க தொடங்கி இருக்கிறார்கள்.
அப்போதுதான் காவல்துறையினருக்கு பிரகாஷின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.
பிரகாஷை தங்கள் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
அதில், பிரகாஷ் சிறுவனை கொலைச் செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆம், மதியரசன் வீட்டருகில் கட்டட வேலை செய்துவந்த பிரகாஷ் அந்த பகுதியிலுள்ள சிறுவர்களை சாக்லேட் கொடுத்து மயக்கி பாலியல் ரீதியாக அவர்களிடம் அத்துமீறியிருக்கிறார்.
அதுபோல் சம்பவத்தன்று மதியரசனை தன்னுடைய காம இச்சைக்கு இறையாக்க நினைத்த பிரகாஷ் ஐஸ்கிரீம் வாங்கிகொடுப்பதாக கூறி சிறுவனை டேங்க் மேல் அழைத்துச் சென்றுள்ளார்.
பிரகாஷ் பாலியல் ரீதியாக சிறுவனை துன்புறுத்த மதியரசன் கத்தி கூச்சலிட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலைச் செய்து வாயில் டேப் சுற்றி தண்ணீர் இல்லாத டேங்கிற்குள் தள்ளிவிட்டிருக்கிறார்.
பிரகாஷின் மிருகத்தனமான செயலால் மதியரசன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார்.
இந்த கொலை தொடர்பாக பிரகாஷை கைதுச் செய்துள்ள காவல்துறையினர். அவர் ஏற்கனவே இது மாதிரியான கொலை சம்பவங்களில் ஈடுப்பட்டு இருக்கிறாரா ? அவரிடம் நரபலி போன்று ஏதேனும் அமானுஷ்ய நம்பிக்கைகள் உள்ளதா ? என்பதை கண்டறிய தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.