வரதட்சணை கொடுமை..! பிரபல நடிகைக்கு சிறை
கன்னட திரையுலகில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் அபிநயா.
இவரின் சகோதரர் சீனிவாஸ் என்பவருக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக லட்சுமி தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு தன் கணவரின் குடும்பத்தாரும், நடிகை அபிநயாவும் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமை படுத்துவதாக கூறி பெங்களூரு போலீசாரிடம் லட்சுமி தேவி புகாரளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு கர்நாடக குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் உறுதிபடுத்தப்பட்டு நடிகை அபிநயா மற்றும் அவருடைய கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், லட்சுமி தேவியின் கணவர் மற்றும் அவருடைய பெற்றோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்திருந்தது.
இதை எதிர்த்து நடிகை அபிநயா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.