மனைவி நடத்தையில் சந்தேகம்..பிளேடால் கரகரவென அறுத்து கொன்ற கணவன்.ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்
சிதம்பரம் அருகே கீழ் அனுப்பம்பட்டை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும், மயிலாடுதுறை மாவட்டம் அரசூரை சேர்ந்த ரோஜா என்பவருக்கும், கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, படுக்கையறையில் இருந்த ரோஜாவின் கழுத்தை பிளாடால் அறுத்துவிட்டு, சிலம்பரசன் தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் ரோஜா உயிரிழந்த நிலையில், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய சிலம்பரசனை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரோஜா 4 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணமாகி 2 மாதங்கள் நிறைவடையாத நிலையில் 4 மாதம் கர்ப்பம் எப்படி வரும் என்று சிலம்பரசனுக்கு சந்தேகம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் கொலை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளார்.
Next Story