ஹைதராபாத்தில் இன்னும் இரண்டு நாட்களில் நடைமுறைக்கு வரும் டபுள் டக்கர் பேருந்து | Double Decker Bus

x

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இரட்டை அடுக்கு மின்சார பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் தொடங்கி வைத்தார். ஹைதராபாத்தில் 2003-ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட இரட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா என்று ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து, 6 இரட்டை அடுக்கு மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. முதல் கட்டமாக ஒப்படைக்கப்பட்ட 3 பேருந்துகளை அமைச்சர் கே.டி.ராமாராவ் உள்ளிட்டோர் பார்வையிட்டு, சோதனை ஓட்டத்தை தொடக்கி வைத்தனர். இந்த பேருந்துகள், வரும் 11-ஆம் தேதி முதல், ஹைதராபாத் சாலைகளில் இயக்கப்படவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்