"என்னது ஒரு தோசை 20 ஆயிரமா"...தலை சுத்தும் உணவு விலை - உணவகத்தில் நடந்த அரிய சாதனை

x

நெல்லையில் உள்ள பிரபல உணவகத்தில் முப்பெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தங்கத்தாள் மூலம் 4 அடி நீளத்தில் தங்க தோசை, 5 கிலோ எடையுள்ள சாக்லேட் பார் மற்றும் பிளம் கேக் ஆகிய மூன்றும் தயாரிக்கப்பட்டது. பிளம்கேக்கின் விலை 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகவும், சாக்லேட் பாரின் விலை ஒரு லட்சம் ரூபாயாகவும், தங்க தோசையின் விலை 20 ஆயிரத்து 230 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன அதிகாரிகள், உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை உணவக உரிமையாளரிடம் வழங்கினர். கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்