"மறந்தும் கூட உங்கள் போனில் இலவச WiFi-ஐ பயன்படுத்த வேண்டாம்"... பதறவைக்கும் பின்விளைவுகள்

x

"மறந்தும் கூட உங்கள் போனில் இலவச WiFi-ஐ பயன்படுத்த வேண்டாம்"... பதறவைக்கும் பின்விளைவுகள்


சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உல்லாசப் பயணம் மேற்கொள்வோருக்கு கேரள காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சர்வதேச ஹேக்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு மாநாடு மீண்டும் தொடங்கியுள்ளது என்ற குறிப்புடன் இது பதிவிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பயண விவரங்களை புகைப்படங்களுடன் டேக் செய்யும் பழக்கம் இளைஞர்களிடையே காணப்படும் நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் பயணத் தகவல் மற்றும் இருப்பிடத்தைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணத்தின் போது பொது மற்றும் இலவச வைஃபை-ஐப் பயன்படுத்த கூடாது, பயன்பாட்டில் இல்லாத போது ப்ளூ டூத்தை ஆஃப் செய்ய வேண்டும், மற்றும் அந்நியர்கள் வழங்கும் சார்ஜர்கள் மற்றும் பவர் பேங்க்குளைப் பயன்படுத்த வேண்டாம் போன்ற பரிந்துரைகள் பகிரப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில், உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 2கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தகைய மோசடிகளுக்கு இரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்