"சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தம் தர வேண்டாம்"- "என்னை கைது செய்யுங்கள்" - மணீஷ் சிசோடியா

x

சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை தர வேண்டாம் என்றும் தம்மை வேண்டுமானால் கைது செய்து கொள்ளலாம் என, டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் டெல்லியில் பெரும் புயலை கிளப்பி உள்ள நிலையில், மனீஷ் சிசோடியா குறித்த ஸ்டிங் ஆப்ரேஷனை பாஜக வீடியோவாக வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, தம் மீது பொய்யான வழக்கு போட வேண்டும் என, சி.பி.ஐ. அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

அதிகாரிகளுக்கு எதற்காக, இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, மனீஷ் சிசோடியா கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஆபரேஷன் தாமரை தான் மத்திய அரசின் ஒரே வேலையா என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்