"உணர்ச்சி வசப்பட வேண்டாம்"- அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

x

உணர்ச்சி வசப்பட வேண்டாம்"- அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை தலைமைச் செயலகத்தல் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், 17ம் தேதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், நெல் கொள்முதல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் துறை ரீதியான கேள்விகளுக்கு அமைச்சர்கள் உணர்ச்சிவசப்படாமல் உரிய பதில்களை அமைதியாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய சட்ட மசோதாக்கள், ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்