"ஆட்சியர் எனக்கூறி பண உதவி கேட்டால் நம்ப வேண்டாம்" - பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

x

ராணிப்பேட்டை ஆட்சியரின் செல்போன் எண்ணை ஹேக் செய்து அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபடுவதால், பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார். ஆட்சியரின் செல்போன் எண்ணை ஹேக் செய்து, போலி வாட்ஸ் ஆப் கணக்கை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள், பண மோசடியில் ஈடுபடுகின்றனர். அந்த எண்ணில் இருந்து யாரேனும் பண உதவி கேட்டால், பொதுமக்கள் நம்ப வேண்டாம் என, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்