ஷாருக், சல்மான் கான்,ரன்பீர் கபூர்... ஹிரித்திக் ரோஷன் பெயர்களில் கழுதைகள் - களை கட்டிய கழுதை சந்தை

x

உத்தர பிரதேசத்தில் இந்தி சூப்பர் ஸ்டார்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூரின் பெயர்களில் கழுதைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

முகலாயர்கள் காலம் முதல் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் மிகவும் வறட்சியான பகுதியான புந்தேல்காண்டில் கழுதை சந்தை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இம்முறையும் சித்ரகுட் மாவட்டத்தில் உள்ள நதிக்கரையோரம் மூன்று நாட்களுக்கு கழுதை சந்தை நடைபெற்றது. சந்தையில் ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை கழுதைகள் விற்பனை செய்யப்பட்டன. வட மாநிலங்களில் கட்டுமான பணியின் போதும் சரி, சலவை தொழிலுக்கும் சரி கழுதைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்த சந்தையில் அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு கழுதைகளை வாங்கினர். குறிப்பாக இங்கு கழுதைகள் பலவும் இந்தி சூப்பர் ஸ்டார்களான ஷாருக் கான், சல்மான் கான், ஹிரித்திக் ரோஷன், மற்றும் ரன்பீர் கபூரின் பெயரில் விற்பனையானது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்