டொனால்டு டிரம்ப் அதிரடி கைது - பிணையில் விடுவித்த நீதிமன்றம்
- ஆபாச பட நடிகைக்கு பணம் அளித்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
- 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது டொனால்டு டிரம்ப், ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு, ஒரு லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்கியதாகவும், அந்த தொகையை தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்டரீதியிலான செலவு என்று பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
- இதுதொடர்பான வழக்கை மன்ஹாட்டன் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
- இதனையடுத்து மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டிரம்ப் கைது செய்யப்பட்டார்.
- பிறகு நீதிமன்றத்தில் அவர், தன் மீதான 34 கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
- பின்னர் டிரம்பை பிணையில் விடுவித்த நீதிமன்றம், மீண்டும் அவரை டிசம்பர் 4 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தியுள்ளது.
Next Story