மாணவிக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை தேவையா? - அடுக்கடுக்காக 12 கேள்விகளை எழுப்பிய காவல்துறை
தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது தொடர்பாக, காவல் துறையினரின் கேள்விகளுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் பதில் அறிக்கை ஒப்படைத்துள்ளது.
கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியான பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், மாணவிக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை தேவையா? யார் யார் அறுவை சிகிச்சை செய்தது? எந்த பரிசோதனையின் அடிப்படையில் கால் அகற்றப்பட்டது? என்பது உள்ளிட்ட 12 கேள்விகளை காவல்துறை தரப்பில் மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம் எழுப்பப்பட்டது. இந்நிலையில், அனைத்து கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் தயார் செய்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. அதில், பணியில் இருந்து மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் கவனக்குறைவாக செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.