கோவிட் டபுள் டோஸ் போட்டவர்களை தாக்குகிறதா மாரடைப்பு..? பகீர் ரிப்போர்ட்... | Cardiac Arrest

x

தனியார் சமூக ஊடகத்தளம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த அதிர்ச்சி தகவலானது வெளிவந்துள்ளது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 51 சதவீத மக்கள், தங்களுக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள், இதய பாதிப்பு, பக்கவாதம், புற்றுநோய் உள்ளிட்ட தீராத நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். திடீரென நோய் பாதிப்புக்கு உள்ளான நபர்களை தெரிந்தவர்கள் 31 சதவீதத்தில் இருந்து, 51 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் இளைஞர்களும், நடுத்தர வயதுடையவர்களே அதிகம். மேலும், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 62 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் என்றும், 11 சதவீதம் பேர் ஒற்றை டோசும், 8 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என தெரியவருகிறது. இதில் கவனிக்கதாக்க விஷயம் என்னவென்றால், நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 61 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், 28 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் தெரிகிறது. மேற்படி ஆய்வின் மூலம், கொரோனா காலத்திற்கு பிறகு தீவிர நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளதா? என ஆராய வேண்டியது காலத்தின் தேவையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்